திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கவிதா, சென்னையை சேர்ந்த மும்தாஜ், கோவையைச் சேர்ந்த சித்ரா ஆகிய மூன்று பெண்கள் கோவையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதில் தமிழன் யூகே என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவரான சிங்கள தமிழர் செந்தில்குமார் ராஜா என்பவர், சென்னையை சேர்ந்த மாயவன் எனும் யூடியூப் நடத்தும் வினோத் வின்சென்ட் ராஜ், சுசிமா என்ற பெயரில் யூடியூப் நடத்தும் சூசைமேரி, லைஃப் இன் மை வே என்ற பெயரில் யூடியூப் நடத்தும் ஜாய் சில்வியா மற்றும் பாஸ்கர் குமார், வள்ளி உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட நபர்களுடன் சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் போன்ற தளங்கள் வாயிலாக பெண்களை தொடர்பு கொண்டு.
அவர்களை கவர்ந்து அவர்களிடம் நன்கு பழகி தங்களின் வலையில் விழச் செய்வதாகவும், பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கே தெரியாமல் அவர்களது வீட்டில் ஸ்பை கேமராக்களை பொருத்தி அதன் மூலம் பெண்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொள்வதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.
மேலும் அந்த அந்தராக வீடியோக்களை சம்மந்த பட்ட பெண்களிடமே அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் தர மறுத்தால் அந்த வீடியோக்களை அவர்களுக்கு சொந்தமான யூடியூப் தளங்களில் பதிவேற்றம் செய்து பலருக்கும் அதனை அனுப்பி வைத்து மிரட்டல் விடுப்பதாகவும் கூறினர்.
இது குறித்து பேசிய திருச்சியைச் சேர்ந்த கவிதா என்ற பெண், தமிழன் யூகே என்ற யூடியூப் பக்கத்தில் அவர்கள் பதிவிடும் வீடியோவிற்கு தான் தொடர்ந்து லைக் போட்டு வந்ததாகவும் அதை தொடர்ந்து அதன் உரிமையாளரான செந்தில்குமார் ராஜா தன்னை தொடர்பு கொண்டு,
நல்லவர் போல் நடித்து தன்னிடம் பழகியவர் பிறகு அவரது நண்பர்கள் என சிலரை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவர்கள் தன்னிடம் ஆபாசமாக பேச தொடங்கினார்கள்.
மேலும் அவர்கள் சென்னை மற்றும் திருப்பூர் அடுத்த அவினாசியை சேர்ந்த நபர்கள் என்றும் கூறினார்.
இதேபோல் பாண்டிச்சேரியில் வசித்து வருபவரும் மக்கள் பார்வை எனும் பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவருமான சித்ரா என்ற பெண், கடந்த ஓராண்டிற்கு முன்பு டிக் டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவை எதிர்த்து குரல் கொடுத்த சிலருடன் தானும் இணைந்து எதிர் குரல் எழுப்பி வந்ததாகவும், அந்த அடிப்படையில் சூசை மேரி, ஜாய் சில்வியா ஆகியோர் சமூக சேவைக்காக என்ற பெயரில் தன்னிடம் பணம் பெற்று அதனை சேவைக்காக பயன்படுத்தாமல் தங்களது சுய லாபத்திற்கு பயன்படுத்தினார்கள் என்று கூறினார்கள்.
தனக்கே தெரியாமல் தனது வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி தனது அந்தரங்க வீடியோக்களை எடுத்து தன்னை மிரட்டுவதாகவும், தனது கணவருடன் தான் இருக்கும் வீடியோக்களை வெளியிடுவேன் எனவும் தனது மகளின் வீடியோவை வெளியிடுவேன் எனவும் மிரட்டல் விடுப்பதாக கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பெண் பாண்டிச்சேரியில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து மாயவன் வினோத், தமிழன் யூ கே செந்தில்குமார் ராஜா ஆகியோர் தன்னை தகாத வார்த்தை பேசி மிரட்டி வருவதாகவும் கூறினார்.
இதேபோன்று சென்னையை சேர்ந்த மும்தாஜ் என்ற பெண்ணும் பாதிக்கப்பட்ட நிலையில் இவர்களின் திட்டம் குறித்து அறிந்ததால் தங்களது ஊரில் இல்லாமல் கோவையிலுள்ள பிரபல வழக்கறிஞரை சந்தித்து சம்பவம் தொடர்பாக வழக்கு தொடுக்க இருப்பதாகவும் கூறினர்.
தொடர் மிரட்டல் விடுத்தும் அந்தரங்க படங்களை தங்களுக்கு சொந்தமான யூடியூபில் பதிவேற்றம் செய்தும் வரும் நபர்களின் செயல்பாடுகளால் கவிதா என்ற பெண் இரு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும்,
இச்செயலில் தாங்கள் மட்டுமல்லாது பல பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே காவல்துறையினர் பாரபட்சமின்றி செக்ஸ் டார்ச்சர் செய்யும் இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.