சுத்தமான் உணவு எங்கு கிடைக்கிறதோ அங்கு தான் மக்கள் அதிகம் உணவருந்துவர் அதற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லுவார்கள், எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்வார்கள்.ஆனால் அவர்களுக்கு சுத்தமான் சுவையான உணவு வேண்டும்.
அந்த வகையில் கோவை சாய்பாபா காலனி என்.எல்.ஆர் சாலையில் அமைந்து உள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் குடும்பத்துடன் உணவு அருந்த வந்து இருந்தார். உனவு வாங்கி அவர்கள் சாப்பிடும் போது அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.

ஆமாம் அவர் வாங்கிய மசால் ரோஸ்டில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் கேட்டார். ஆனால் பதில் அளிக்க மறுத்த ஊழியர்கள் செய்வது அறியாது திகைத்து நின்றனர். மேலும் அவர் வாங்கிய மசாலா ரோஸ்டில் உள்ள கரப்பான் பூச்சி மற்றும் அவர் ஊழியர்களிடம் இது குறித்து கேட்கும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாலையோரம் இருக்கும் உணவகங்கள் மற்றும் பழக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து செயற்கை முறையில் பழுக்க வைக்கும் பழங்கள் மற்றும் தரமற்ற உணவுகளை வழங்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.
ஆனால் பெரிய நிறுவனங்களில் இது போன்ற நடைபெறும் நிகழ்வுகளை எத்தனை புகார் கொடுத்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.என்கிறார்கள் பொது மக்கள்.
இந்நிலையில் கோவையில் பிரபலமான உணவகத்தின் கிளைகள் மாநகர் முழுவதும் உள்ளது. இந்நிலையில் பிரபலமான உணவகத்தில் குடும்பத்துடன் சாப்பிட வந்த நபருக்கு நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சி மற்றும் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.