விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை வளரத்திற்குள் திடீரென 10 அடி கொண்ட நாகப்பாம்பு மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்ததால் அங்கிருந்தவர்களிடயே பெரும் பயத்தை ஏற்படுத்தியது பின்னர் விக்கிரவாண்டி தீயணைப்பு துறையினர் பாம்பை லாபகமாக பிடித்தனர்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் மருத்துவமனை பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென சுமார் 10 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஒன்று மருத்துவமனை வளாகத்திற்குள் திடீரென்று நுழைந்ததால் மருத்துவமனையில் பணிபுரிந்த பணியாளர்கள் அச்சத்தோடு வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து விக்கிரவாண்டி தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் விரைந்து வந்த விக்கிரவாண்டி தீயணைப்புத்துறை அதிகாரிகள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 10 அடி கொண்ட நாகப்பாம்பை யாருக்கும் எவ்வித சேதம் இன்றி அங்கிருந்து பாம்பை பிடித்து சென்றனர்.
விக்கிரவாண்டி தீயணைப்பு துறை அதிகாரிகள் திடீரென்று 10 அடி கொண்ட நாகப்பாம்பு மருத்துவமனைக்குள் நுழைந்ததால் அங்கிருந்து அவர்களுடைய சிறிது பயத்தை ஏற்படுத்தியது.