ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்பது சரியே – கபில்சிபல் .

2 Min Read
காங்கிரஸ் தலைவர் கபில்சிபல்

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்பது சரியே என காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழக முதல்வர், ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு எழுதிய 15 பக்க கடிதத்தில், ஆளுநர் ரவியின் நடவடிக்கைகள் அவர் ஆளுநராக இருக்க தகுதியற்றவர் என்பதை காண்பிப்பதாக ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தை மேற்கோள் காட்டி கபில்சிபில் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

கபில்சிபல் திங்களன்று பதிவுசெய்த ஒரு ட்வீட்டில், ஆளுநர்கள் குறித்து அம்பேத்கர் கூறி கருத்துக்கள் என்ற தலைப்பில் :“செயல்பாட்டாளர்.. முற்றிலும் அலங்கார செயல்பாட்டாளர். நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லை.” என்பதனை சுட்டி காட்டி , எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களுக்கு இந்துத்துவா கொள்கைகள் இருப்பதாகவும் கபில்சிபில் தெரிவித்துள்ளார் .

இவ்வகை ஆளுநர்கள் அரசியல் அமைப்பை  சீர்குலைக்கிறார்கள் மற்றும் மக்களிடையே வெறுப்பைத் தூண்டுகிறார்கள் . ரவியை நீக்க ஸ்டாலின் கேட்பது சரிதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபில் அவரது பதிவில் தெரிவித்துள்ளார் .

ரவி – ஸ்டாலின் 

ஞாயிற்றுக்கிழமை அன்று குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் , ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் தமிழக மக்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக இருக்கின்றது . தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பல்வேறு நடவடிக்கைகள் அவர் கவர்னராக இருக்க தகுதியற்றவர் என்பதை காட்டுகிறது.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுமதி அளிப்பதில் தேவையில்லாமல் காலதாமதம் செய்கிறார்.

ராஜ்பவனுக்கு மாநில அரசு அனுப்பிய ஆவணங்களைப் பொருட்படுத்தாமல் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க ஆளுநர்  அனுமதி அளிக்க மறுக்கிறார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு ஆளுநர் எதிரியாக செயல்படுகிறார்.

மேலும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதன் மூலம் ஆளுநர் மிகப்பெரிய அரசியல் விதியை மீறியுள்ளார் , இதற்கெல்லாம் மேலாக ஆளுநர் போலீஸ் விசாரணையில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கிறார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி இருந்த  நிலையில், குழந்தை திருமண வீடியோ வெளியாகி ஆளுநரின் கருத்து பொய்யானது.

ஜூலை 8 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த தினத்தன்று ஸ்டாலின் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

.

Share This Article
Leave a review