நிலச்சரிவு பகுதியில் யானை வழித்தடத்தை அழித்து சாலை அமைக்கும் பணி தீவிரம் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களும் காணவில்லை

1 Min Read
குரும்பாடிகுரும்பாடி

இயற்கைக்கு மாறாக செயல்படும் போது இயற்கை தன் வேலையை காட்டுகிறது.குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குரும்பாடி பழங்குடியினர் கிராமம் உள்ளது.அதன் அருகே அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் யானைகள் மற்றும் வன விலங்குகள் ஏராளமாக வாழ்ந்து வருகின்றன.

- Advertisement -
Ad imageAd image
சாலை அமைக்கும் பணி 

அடர்ந்த சோலை காடுகள் என்பதால் இங்கு   சந்தனம்   ஈட்டி, பலா, மா, மரங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு  தனியார்  சிலர் உரிய அனுமதியின்றி சுமார் 50 ஏக்கர் நிலத்தில் பொக்லைன் பயண்படுத்தி  யானை வழித்தடத்தை அழித்து  சொகுசு விடுதிகள் கட்ட சாலை அமைத்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியை அழித்து நூற்றுக்கும் மேற்பட்ட வில உயர்ந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த  மா,பலா, ஈட்டி மற்றும் சந்தன மரங்களை வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக தகவல்.

யானை வழித்தடத்தை அழித்து பல கிளைகளாக சாலை அமைத்துள்ளனர்.   யானைகள் வழித்தடத்தை அழித்ததால் யானைகள் சென்று வர முடியாத சூழல் உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு வெட்டி கடத்தப்பட்ட மரங்கள் மற்றும் அனுமதியின்றி யானை வழித்தடத்தை அழித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பழங்குடியின மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சாலை

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் வன விலங்குகள் பாதுகாக்கப்படும்.தமிழக அரசும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள்.

Share This Article
Leave a review