விழுப்புரத்தில் பயங்கரம் : ஆறு வயது சிறுமியை , தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த 4 சிறுவர்கள் கைது .

3 Min Read
ஆறு வயது சிறுமி

விழுப்புரம் அருகே ஐந்து பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நான்கு  சிறுவர்களை விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் இந்த நான்கு சிறுவர்களும்  அந்தப் பகுதியில் வசிக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட  சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது தெரிய வந்தது .

- Advertisement -
Ad imageAd image

மேலும் சிறுமிகளின் ஆபாச விடீயோக்களை தங்களது மொபைல் போன்களில்  வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி , தள்ளு வண்டியில் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கு ஆறு வயதில் , இரண்டாவது படிக்கும்  பெண் குழந்தை உள்ளது . இந்த சிறுமி அதே  பகுதியில் இயங்கிவரும்  அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த  சில தினங்களுக்கு முன்பு அந்த  ஆறு வயது சிறுமிபள்ளிக்கு சென்றபோது திடீரென உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளது . இதனை கண்டறிக அறிந்த அந்த பள்ளியின் பெண் ஆசிரியர் ,   பாதிக்கப்பட்ட  சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் .

மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதனை செய்தபோது , அந்த சிறுமியின் பெண்ணுறுப்பில் காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ந்தனர் . இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது .

அந்த சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரணை மேற்கொண்ட போதுதன்னை 14 முதல் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் தொடர்ந்து ஒரு மாத காலமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்களும் ஆசிரியர்களும் இந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர் , தகவலின் பெயரில் மருத்துவமனைக்கு வந்த  சமூக நலத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர் .

அப்பொழுது அந்த சிறுமி ஜானகிபுரத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் தன்னை உட்பட மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தெரிவித்தார் .

மேலும் அவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.  இந்த சிறுமிகளின் ஆபாச வீடியோக்களையும்  சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர் .

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட அந்த நான்கு  சிறுவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் .

மேலும் அவர்கள் கொடுத்த  ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களை விழுப்புரம் மாவட்ட  இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜ படுத்தப்பட்டு கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்,

பாதிக்கப்பட்ட 5  சிறுமிகளை அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இந்தியாவில்  இணையம் சார்ந்த குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது . அவற்றில் பெண்கள் குறிப்பாக சிறுமிகளே முக்கிய இலக்குகளாக உள்ளனர். ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட்கள், பெயர் முகம் அறியாத எந்த ஒரு பெண்னையும் எளிதில் தாக்கும் வகையில் உள்ளன.

ஸ்மார்ட் போன் புழக்கம் அதிகமாகியுள்ளதால் கடந்த சில காலமாக இளம் பெண்கள் மற்றும்  சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் பள்ளி, கல்லூரி, வசிப்பிடம் அருகே என  பல்வேறு இடங்களில் வயது வித்தியாசமின்றி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப் உழைக்க படுகிறார்கள் . பெரும்பாலும் தெரிந்த நபர்களாலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் .

குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளில் மற்றம் காணப்பட்டால் அவர்களிடம் இயல்பாக பேசி அவர்களின் குறைகளை கேட்டுஅறிய வேண்டும் . அவர்கள் பாலியல் ரீதியாக பாதிப்படைந்திருந்தால் உடனடியாக குழந்தைகளுக்காக பிரத்யேகமாக இயங்கும் சைல்ட்லைன் அமைப்பை 1098 என்ற ஹெல்ப்லைன் நம்பரை தொடர்புகொண்டு உரிய சட்ட உதவியை பெற்றுக்கொள்ளலாம் .

Share This Article
Leave a review