பழைய குருடி கதவைத் திறடி என்பது போல., மீண்டும் அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா

0
51
சீனா ஆக்ரமிப்பு பகுதி

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. 1962-ம் ஆண்டு போரின் போது ஆக்கிரமிப்பு செய்து அந்த பகுதிக்கு அக்ஷாய்சின் என பெயரிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை முழுமையாக சொந்தம் கொண்டாடி வரும் சீனா அந்த மாநிலம் இந்தியாவுக்கு சொந்தம் அல்ல என கூறி வருகிறது. ஆனால் இதை நிராகரித்துள்ள இந்தியா அருணாச்சல பிரதேசம் முழுக்க முழுக்க இந்தியாவுக்கே சொந்தம் என தெரிவித்துள்ளது. ஆனாலும் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பகுதியாக மீண்டும் அறிவித்து உரிமை கொண்டாடி சீனா புதிய வரை படத்தை வெளியிட்டுள்ளது.  

சீனா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வரை படத்தில் வழக்கம் போல் ஆக்கிரமித்த இந்திய பகுதிகளை அக்ஷயாசின் என குறிப்பிட்டு இருக்கிறது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை தெற்கு திபெத் எனவும் இடம்பெற செய்து இருக்கிறது. இந்திய நிலப்பகுதிகளை மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளை கூட சீனா தங்களது பிரதேசம் என இந்த வரைபடத்தில் உரிமை கோரி இருக்கிறது. தைவானையும் தம்முடைய நிலப்பகுதியாக சீனா சொல்லி கொள்கிறது. தென் சீனா கடலின் பெரும் பகுதியையும் இந்த வரைபடம் மூலமாக தனது நிலம் என்கிறது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதல், பூட்டான் டோக்லாம் பீடபூமி மோதல்களை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  

இரு தரப்புக்கும் இடையேயான பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள். எல்லைப் பகுதியில் அமைதி, நிலைத் தன்மைைய இரு தரப்பும் உறுதி செய்ய வேண்டும் என அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அருணாச்சலப் பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா மீண்டும் அடாவடியை தொடங்கிவட்டது. ஜி 20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும 10-ந் தேதிகளில் இந்தியாவில் நடக்கிறது. இதில் சீன அதிபர் கலந்து கொள்கிறார். இந்த நேரத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்டுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here