திண்டுக்கல்லில் பிறந்த சில நாட்களேயான பெண் குழந்தையை குளத்தில் வீசி சென்ற மர்ம நபர்கள் .இறந்து அழுகிய நிலையில் மிதந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்நிலையில் குளத்தில் உள்ள தண்ணீர் பொதுமக்களின் நிலத்தடி நீருக்காகவும் விவசாயத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று காலை பகுதி மக்கள் குளத்தின் வழியே சென்ற பொழுது பிறந்து சில நாட்களான பச்சிளம் பெண் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மிதந்துள்ளது.

இதை அடுத்து தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் நேரடியாக வந்து பார்த்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து யார் இந்த குழந்தையை எரிந்து சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் பெண் குழந்தையின் உடல் குளத்தில் உயிரிழந்து மிதந்த சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.