திருப்பூர் மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்திய டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது போலியாக இன்சூரன்ஸ் காப்பீடு வைத்துள்ளதால் சம்பந்தப்பட்ட நபர் மீது போலிசார் நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் அதிகாரி அருண்குமார் புகார் அளித்துள்ளார் .
செய்தியாளர்களை சந்தித்து பேசிய இன்சூரன்ஸ் அதிகாரி அருண்குமார் என்பவர், திருப்பூர் மாவட்டம் தெற்கு காவல் நிலையம் எல்லைகுட்பட்ட பகுதியில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் 33 வயது பெண் சாலையை கடக்கும் போது டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே அந்த பெண் உயிரிழந்தார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொது மக்களிடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.இச்சம்பவம் திருப்பூர் மாவட்டம் தெற்கு காவல் நிலையம் எல்லைகுட்பட்ட பகுதி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் அதிகாரி அருண்குமார் இழப்பீடு இன்சூரன்ஸ் பரிசோதிக்கும் போது விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் மீது போலியாக இன்சூரன்ஸ் தயாரித்துள்ளது.ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் அந்த வாகனத்திற்கு எந்த விதமான இன்சூரன்ஸ் வழங்கப்படவில்லை என ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிர்வாகம் தெரிவித்தனர்.ஆனால் அந்த வாகனத்தில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸில் காப்பீடு போட்டதாக பதிவுகள் உள்ளது.
இதுபோல் போலியாக இன்சூரன்ஸ் தயாரிப்பதினால் சம்பந்தப்பட்ட நபர் மீது போலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்க முடியாது எனவும், இதுபோல் போலியாக இன்சூரன்ஸ் தயாரிக்கும் நபர்கள் மீது காவல்துறையை வழக்கு பதிவு செய்து அவர்கள் தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.

விபத்தில் உயிரிழந்த குடும்ப பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.அந்த குழந்தைகளுக்கு தற்போது எந்த விதமான நிவாரணம் அளிக்க முடியவில்லை. பொதுமக்கள் சரியான முகவரிகளிடம் இன்சூரன்ஸ் காப்பீடு போடுமாறு வலியுறுத்தினார். இது குறித்து விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரிடம் கேட்கும் போது அவரும் ஏமாந்துள்ளதாக கூறப்படுகிறது.
மோட்டார் வாகனம் சட்டப்படி உரிய ஆவணங்கள் இருந்தால் இழப்பீடு வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என்று கூறினார்.