பாராளுமன்ற தேர்தலை எதிர் நோக்கியிருக்கும் சூழலில் ”இந்தியா” கூட்டணி சார்பில் பல்வேரு நிகழ்வுகளை முனெடுத்து வருகிரது திமுக அந்த வகையில் சென்னையில் மகளிர் உரிமை மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு நடத்துகிறது.அதற்க்கு தேசிய தலைவர்களையும் அழைத்திருகிறது.குறிப்பாக சோனிய காந்தி, பிரியங்கா ஆகியோரை அழைத்திருக்கிறது.
திமுக மகளிர் அணி நடத்தும் திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள இரவு சென்னை வந்த காங்கிரஸின் சோனியா காந்தியை விமான நிலையத்திற்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் வரவேற்றனர்.சென்னையில் சனிக்கிழமை அக். 14ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வெகு நடைபெற உள்ளது.

மாநாட்டில் பெண் தலைவர்கள்
இன்று மாநாடு நடைபெறும் இடத்தில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை நேற்று வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தனர். இந்த மாநாட்டையொட்டி ஒய்.எம்.சி.ஏ. திடலில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மகளிர் உரிமை மாநாட்டில் தேசிய தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாகச் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள். “இந்தியா” கூட்டணியில் இருந்து மொத்தம் 9 பெண் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

புத்தகங்கள் பரிசு
இதற்காகச் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர்.சென்னை வந்த அவர்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார். மேலும், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு புத்தங்களையும் பரிசாக அளித்தார்.
அப்போது கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி ஆகியோரும் நேரில் வரவேற்றனர். மேலும் டிஆர் பாலு எம்பி மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்ட தமிழக அமைச்சர்களும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை நேரில் வரவேற்றனர். விமான நிலையத்தில் திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.திமுக நடத்தும் மகளிர் மாநாடு எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ”இந்தியா” கூட்டணியின் பிரச்சாரத்திற்கான ஒத்திகையாக பார்க்கப்படுகிறது.