தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுமை மிக்கவர் – சபாநாயகர் அப்பாவு

1 Min Read
சபாநாயகர் அப்பாவு

ஆவடியில் இந்தியன் ஓவர்ஸிஸ் வங்கி, புதிய கிளை சபாநாயகர் திறந்து வைத்தார்

- Advertisement -
Ad imageAd image

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, சபாநாயகர்

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது சில பெயர்களை நீக்கியும், சில பெயர்களை சேர்த்தும் வாசித்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து மிக நேர்த்தியாக தமிழக அரசு தயாரித்த உரையை வாசித்து, அவை குறிப்பில் அரசு தயாரித்த அறிக்கைதான் ஏற்ற வேண்டும் என்று ஆளுமையோடு ஆளநருக்கு பதில் அளித்தார். நடந்துக் கொண்டார்.

அதேபோல் தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவதாக சில விசமிகள் வதந்திகளை பரப்பினார்கள்.

அப்போது மிக துணிச்சலாக போலி வீடியோவை வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். உண்மை தன்மையை வெளியில் கொண்டுவந்தார். அதனால் இன்று மணிப்பூர் மாநிலம் போல் கலவரம் நடைபெற இருந்ததை தடுத்து நிறுத்தியதாக சபாநாயகர் கூறினார்.

1975ல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி எதிர்கட்சிகளை மிரட்டி அடக்கினார். 1976 ஜனவரி 31ல் எமர்ஜன்ஸியை கொண்டுவந்தார். அப்போது தலைவர் கலைஞர் நெருக்கடி நிலையை (எமர்ஜன்ஸியை) எதிர்த்தார். இந்தியாவில் உள்ள எதிர்கட்சி தலைவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கினார். அதனால் ஆட்சியை இழந்தார். ஆனாலும் யாருடைய மிரட்டலுக்கும் அடிப்பணியாத இயக்கம் திரவிட முன்னேற்றக் கழகம் என்று கூறினார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்து வருகிறார். அவர் தானக பதவி விலகவில்லை என்றால் ஆளுநர் நிர்பந்தப்  படுத்துவதற்காக பதவி விலக தேவையில்லை என்றார்., இந்நிகழ்ச்சியில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர் மேயர் உதயகுமார் மற்றும் வங்கி மேலதிகாரிகளும் ஊழியர்களும் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a review