தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆறுகள் தூர்வாரும் பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் .
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றில் 189 பணிகள் சுமார் 1060 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூபாய் 20 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது,
தூர் வாரும் பணியினை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த மாதம் தொடங்கி வைத்திருந்தார், தொடர்ந்து தூர்வாரப்பட்டு வரும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் ,வரும் வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதை அடுத்து தூர்வாரும் பணிகளின் நிலைகுறித்து அவர் ஆய்வு செய்கிறார் ,தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி ஊராட்சியில் உள்ள முதலை முத்துமாரி மற்றும் பூதலூர் வட்டம் விண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.