சென்னை போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் நேரடியாக அடையார் ஆற்றில் கலக்கும் வகையில் முடிக்கப்பட்ட பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு இன்று ஆய்வு செய்தார்
.
ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையின் காரணமாக போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் பரணிபுத்தூர், மவுலிவாக்கம், அய்யப்பன்தாங்கல், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், கொளுத்துவான்சேரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டு வந்தன.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021-ல் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரால் பாதிப்புகள் ஏற்படாதவாறு நிரந்தரமாக தீர்வு காண ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்படி போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை நேரடியாக அடையாறு ஆற்றில் கலப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக இரண்டு மாதகுகள், மற்றும் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் செல்வதற்கு இரண்டு இடங்களில் மதகுகள் அமைக்க ரூ.100 கோடியும், மற்றும் மதுரவாயல் – தாம்பரம் பைபாஸ் சாலை இடையே ரூ.85 கோடியில் புஷ் அண்ட் துரோ கல்வெட்டுகள் அமைப்பதற்கு தமிழ் நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
மேலும் போரூர் ஏரியில் இருந்து நேரடியாக அடையார் ஆற்றில் நேரடியாக உபரி நீர் கலக்கும் வகையில் மதகு மற்றும் 3300 மீட்டர் தூரத்திற்கு கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
எதிர் வரும் வடகிழக்கு பருவ மழயின் போது இந்த பகுதிகளில் எந்த பாதிப்பும் நிகழக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.