சென்னை பல்கலைகையின் பட்டமளிப்பு விழா வரும் ஆறாம் தேதி நடக்கிறது இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். சென்னை பல்கலைகையின் பட்டமளிப்பு விழா சென்னை பல்கலை எண் 165 வது பட்டமளிப்பு விழா வரும் 6ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட உள்ளது.
பல்கலையின் வேந்தர் கவர்னர் ரவி தலைமையில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார். அவர் பட்டமளிப்பு விழா உரையும் நிகழ்த்த உள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்கலை வேந்தர் கௌரி, உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் 1200 பேர் பட்டம் பெற உள்ளனர். பிஹெச்டி ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், பல்கலை அளவிலான செமஸ்டர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தங்க மதிப்பு பழக்கம் பெற்றவர்கள், மற்றும் பீ.லிட்., பட்டம் பெற்றவர்கள் பட்ட சான்றிதழ் பெற உள்ளனர்.