தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளி வரை புதிய கோடைகால சிறப்பு ரயிலை எம்பி பழநிமாணிக்கம் தொடங்கி வைத்து ரயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்,மேற்கு நோக்கி செல்லும் ரயில் பயணிகளுக்கு புதிய ரயில்கள் வேண்டும் என்று நீண்ட காலமாக மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைத்தனர்.
இதன் அடிப்படையில் தஞ்சாவூர் தொகுதி திமுக எம்பி பழநிமாணிக்கம் முயற்சியால் கர்நாடக மாநிலம் ஹூப்ளி வரை செல்லும் புதிய ரயில் செவ்வாய் ( 21.3.23) அன்று இரவு 7:40 மணிக்கு இயக்கப்பட்டது அதேபோல் மறு மார்க்கத்தில் திங்கட்கிழமை முதல் (மார்ச் 27 ஆம் தேதி) இரவு 8.25 மணிக்கு பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் சேலம் திருச்சி பூதலூர் வழியாக தஞ்சாவூருக்கு செவ்வாய் அன்று மதியம் 2.15 தஞ்சை ரயில் நிலையத்தை வந்தடையும், அதேபோல் தஞ்சாவூரில் இருந்து செவ்வாய் 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் புதன்கிழமை மதியம் 12:30 மணிக்கு ஹூப்ளி ரயில் நிலையத்தை சென்றடையும், இதனால் பெங்களூர் செல்லும் ரயில் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்,

இது குறித்து எம்பி பழநிமாணிக்கம் கூறும்போது, நீண்டகாலமாக மேற்கு நோக்கி செல்லும் ரயில் பயணிகளுக்கு போதிய அளவில் ரயில் சேவை இல்லை என்ற குறை இருந்தது, அதை நிவர்த்தி செய்யும் வகையில் கோடைகால சிறப்பு ரயில் தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு விடப்பட்டுள்ளது.
மக்களின் பயன்பாடு, வரவேற்பு ஆகியவற்றைப் பொறுத்து இதை நிரந்தரமாக்க ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து முயற்சி செய்வேன் என்றும், மேலும் இன்டர்சிட்டி ரயில் கேட்டுள்ளதாகவும், சோழன் விரைவு ரயிலை பகல் நேரத்தில் இரு மார்க்கமும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும், ரயில் பாதைகள் மின் மயமாக்கம் செய்யப்பட்டதன் பயனை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றால் போக்குவரத்து நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளதாகவும், தஞ்சாவூர் – அரியலூர் முன்மொழிவு வந்தது, தஞ்சாவூர் – பட்டுக்கோட்டைக்கு இந்த வருடமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதேபோல மன்னார்குடி – பட்டுக்கோட்டைக்கு இந்த வருடம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இதில் நில எடுப்பு விவசாய நிலங்கள் புதிய குடியிருப்பு உள்ளதால் பொது மக்களின் கருத்தை அறிந்து புதிய லயன் அமைப்பதற்கு தொடர்ந்து வேலை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார் .
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமநாதன்,ஆணையர் சரவணகுமார், ரயில்வே துறை அதிகாரி டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.