Chennai- சாலையோர நடைப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ..

2 Min Read
  • சென்னை சாலையோர நடைப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் சாலையோரங்களில் பாதசாரிகள் நடப்பதற்கு நடைப்பாதைகள் அமைக்கப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

இந்த நடைப்பாதைகள் முழுவதும் கடைகள், உணவகங்கள், என பல்வேறு அக்கிரமிப்புகளும், வாகனங்கள், சேர் ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் சாலையோர நடைப்பாதைகளை பயன்படுத்த முடியாமல் வாகனங்கள் செல்லும் சாலைகளில் ஆபத்தான முறையில் செல்வதால் விபத்துக்களும் அதிகரித்துள்ளன.

குறிப்பாக சென்னை கே கே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை சாலையோரத்தில் நடைப்பாதைகள், அசோக் நகர் 4 வது அவன்யூ, வேளச்சேரி மெயின் ரோடு, திநகர் ஹிந்தி பிரச்சார சபா ரோடு, ஜி என் செட்டி ரோடு, கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதிகளில் சாலையோரங்களில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைகள் அனைத்தும் அக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது

உணவகம் என பல ஆக்கிரமிப்புகளும், வாகனங்கள், ஷேர் ஆட்டோ நிறுத்தும் இடமாக நடைபாதை உள்ளது என்றும் சாலையோர நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை; ஆபத்தான முறையில் வாகனங்கள் செல்வதால் விபத்து அதிகரிப்பு என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி, சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இந்தியன் மக்கள் மன்றம் நிர்வாகியும், பத்திரிக்கையாளருமான வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கானது பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சாலையோர நடைப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக செயல்படும் போக்குவரத்து காவல்துறை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.

 

Share This Article
Leave a review