- கல்லூரி மாணவர்களுக்கு விற்பதற்கு கஞ்சா கடத்தியதாக கைதான, வாலிபரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெயசூரியா இவர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஆந்திரா மாநிலம் விஜயவாடா கொண்டபள்ளியிலிருந்து, சென்னை தாம்பரத்திற்கு கஞ்சா கடத்துவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தின் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஜெயசூரியா 4 கிலோ 600 கிராம் அளவிற்கு கஞ்சாவை வைத்திருந்தாக கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இந்த வழக்கு சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெர்மீஸ், முன்னிலை விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கில் புலன் விசாரணை அதிகாரியின் அறிக்கை மற்றும் குறுக்கு விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/madras-high-court-orders-that-there-is-no-law-to-grant-permission-for-hunger-strike/
ஆவணங்களை விசாரணை அதிகாரி முறையாக கையாளவில்லை எனவே, குற்றச்சாட்டுகளின் பலன்களை குற்றம் சாட்டபட்டவருக்கு அளித்து ஜெயசூரியாவை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.