சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பதற்காக ராஜ்பவனிற்கு வருகைதந்துள்ளார். அடையாறு துணை ஆணையர் பொன்கார்திக்-க்கும் உடன் வந்துள்ளார். நேற்று மாலை ஆளுநர் மாளிகை வாயிலில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கருக்கா வினோத் என்பவரை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையிலடைத்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆளுநர் நிறைவேற்றவில்லை என்பதற்காக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாக கருக்கா வினோத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டது. ஐபிசி பிரிவு 124-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் கோரிக்கை வைக்கபட்டது.

இதனை அடுத்து சென்னை மநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆளுநரை சந்தித்தார். நேற்று நடைபெற்ற விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்னை வருவதால் அதற்காக எடுக்கபட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் ரவியுடன் காவல் ஆணையர் சந்தித்து பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுவது பற்றி ஆலோசித்தனர்.
குடியரசுத் தலைவர் இரண்டு நாள் பயணமாக சென்னை வர இருக்கும் நிலையில், அவரின் வருகைக்காக தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்,ஆளுநர் மாளிகை முன்பு நடந்த குண்டு வீச்சு சம்பவம் குறித்தும், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியுலுள்ள ராஜ் பவனில் சந்தித்தார்.
மேலும் இந்திய குடியரசுத் தலைவர் இன்று தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க உள்லதால் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.ஆளுநர் மாளிகை முன் நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதல் யார் நடத்தியது பின்புலத்தில் யார் யாரெல்லம் உள்ளார் என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாட்டில் இது போல நடை பெற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் வந்த உடன் வழக்கு இனும் தீவிரப்படுத்தப்படும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்