சென்னை காவல் ஆணையர் சாலை பாதுகாப்பு ரோந்து திட்டத்தை துவக்கி வைத்தார்.!

0
31
காவல் ஆணையர் ராய் ரத்தோர்

சென்னை பெருகர காவல் ஆணையாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து (RSP) திட்டத்தை துவக்கி வைத்தார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது, விபத்துகள் மற்றும் இறப்பு விகிதத்தை குறைப்பதில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்த சாலைப் பாதுகாப்பு ரோந்து 1 பல்வேறு வழிகளில் சாலைப் பயனாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த ஆர்எஸ்பி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் பொழுது மேடையில் பேசிய காவல் ஆணையர் ராய் ரத்தோர் கூறியதாவது,

சாலை பாதுகாப்பு காவலர்கள் இங்கே உள்ளது போல் உலகில் எங்கும் இல்லை அதுவும் இந்தியாவில் இல்லை தமிழகத்தில் மட்டும் தான் பெரிய அளவில் சாலை பாதுகாப்பு போலீசார் அதிக அளவில் உள்ளனர். 25 ஆயிரம் பேருக்கு மேல் சாலை பாதுகாப்பு போலீசார் இங்குதான் இருக்கிறார்கள். இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுதிமொழி  அவர்களுக்கு மட்டுமல்லாமல் இங்கு இருக்கக்கூடிய
அனைத்து அதிகாரிகளையும் நான் கேட்டுக் கொள்வது இன்னும் இருக்கக்கூடிய அனைத்து பள்ளி மாணவர்களும் இந்த உறுதி மொழியை எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மாணவர்களும் உங்கள் வீட்டில் சென்று உங்கள் பெற்றோர்கள் சகோதரர்கள் உறவினர்கள் அனைவருக்கும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஆலியுங்கள் இன்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளியில் இருந்த மாணவர்கள் 2000 பேர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் பின் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர்,

இன்றைக்கு நடந்த இந்த நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு வர்டன்கள் உள்ளனர், இங்கே இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு குழந்தைகள் எவ்வாறு வாகனங்களை ஓட்ட வேண்டும் சாலை விதிமுறைகளை எப்படி கடைபிடிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு ரோந்து காவலர்கள் மொத்தம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இந்தியாவில் எவ்வளவு பெரிய அளவில் எங்கும் இல்லை, இதன் நோக்கமே சிறுவயதில் catch them young என்ற தலைப்பில் சிறு வயது முதலே இவைகளை பற்றிக் கொள்ளும் நோக்கத்தோடு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது,

இந்த குழந்தைகள் மூலம் போக்குவரத்து வார்டன் மற்றும் போக்குவரத்து காலர்களோடு இணைந்து பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பயன்படுத்த வலியுறுத்துவதன் மூலம் சாலை விதிமுறைகளை பொதுமக்கள் ஒழுங்காக கடைபிடிக்க உதவும். சென்னை பெருநகரத்தில் ஏற்கனவே உள்ள நான்கு வழி சாலை செயல்பட்டுக் கொண்டிருந்தது ஆனால் சில இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் அவைகள் முடக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அந்த பணி முடிந்தவுடன் மீண்டும் அதற்கான நியமிக்கப்பட்ட குழுவுடன் ஆலோசனை செய்து நான்கு வழி சாலை செயல்படுத்தப்படும்.

முக்கியமான சாலைகளில் போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கான பணிகள்
நடைபெற்று வருகிறது, அவைகளை பராமரிக்கும் பணியும் நடைபெறும். பெருநகரங்களில் எங்கெங்கு அதிகமான போக்குவரத்தில் நெரிசல் ஏற்படுகிறது என்பதை கூகுள் மேப் மூலம் கண்காணித்து உடனடியாக அதிகாரிகள் அந்த இடத்தை போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here