சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல்.

1 Min Read
  • சென்னை மற்றும் சென்னை ஒட்டியுள்ள திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில்.

கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளான மாதர்பாக்கம் ஆரம்பாக்கம் கவரப்பேட்டை தச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்து வரும் இந்த மழையின் அளவு கடந்த 12 மணி நேரத்தில் 18 எம் எம் பதிவாகிய நிலையில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இதனால் அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி ஓட்ட பயிற்சி மேற்கொள்பவர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிரமத்திற்குள்ளானார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல் பயிர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

காலை நேரத்தில் கூடுதல் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் குடைகளைப் பிடித்தபடி பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதை நம்மால் நேரடியாக காண முடிகிறது. அதேபோல் வேலைகளுக்கு செல்பவர்கள் குடைகளை பிடித்தபடி சிரமத்துடன் வேலைகளுக்கு செல்கின்றனர்.

மேலும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுத்து வருகின்றனர்.

கொஞ்சம் இதையும் படிங்க :   https://thenewscollect.com/the-lock-of-the-government-bus-drivers-house-near-kummidipoondi-was-stolen-with-a-fake-key/

காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் பள்ளி கல்லூரிகள் இயங்குமா அல்லது விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

Share This Article
Leave a review