சென்னை விமான நிலையம்: ₹4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது

1 Min Read
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

அபித்ஜன்னிலிருந்து அடிஸ் அபாபா வழியாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்த கவோடியா அடிங்கரா என்ற நபரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவரது உடைமைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட ஆம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தூள் வடிவில் இருந்த 1999 கிராம் எடையுள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்தனர். இதன் மதிப்பு 4 கோடி ரூபாயாகும்.

இந்தத் தகவலை சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர்  மேத்யூ ஜாலி தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review