தனியார் விடுதியில் வாத்தை கவ்வி சென்ற சிறுத்தை..!

2 Min Read

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள தனியார் விடுதியில் வாத்தை கவ்வி சென்ற சிறுத்தை கேமராவில் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.சமுக வலைதளத்தில் வைரல் ஆகும் வீடியோ.அப்பகுதி பெரும் பரப்பரப்பை ஏற்பத்தியது.

- Advertisement -
Ad imageAd image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சமீப காலமாக காட்டு விலங்குகள் குடியிருப்பு நகர் பகுதியில் உலா வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. நிலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்பு நகர் பகுதி மற்றும் கிராமங்கள் அடர்ந்த காட்டு வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ள நிலையில் இருக்கிறது.

தனியார் விடுதியில் வாத்தை கவ்வி சென்ற சிறுத்தை கேமராவில் சிசிடிவி காட்சி

அதனால் சமீப காலமாக காடுகளில் இருந்து கரடி, காட்டு யானைகள், காட்டு மாடுகள் மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரருக்காக தேடி, நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உலா வர தொடங்கி உள்ளது. அவ்வாறு இன்று அதிகாலை கொணவக்கரை பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று நகர் மற்றும் கிராம பகுதிகளுக்கு உலா வந்துள்ளது.

அப்போது இயங்கி வரும் தனியார் விடுதில் வாத்து வளர்க்கப்பட்டுள்ளன.காட்டு விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரருக்காக தேடி, நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உலா வந்த சிறுத்தை ஒன்று திடிரென்று தனியார் விடுதில் இருந்து வரும் வாத்துக்களை கவ்வி சென்று உள்ளது. தனியார் விடுதியில் வாத்தை கவ்வி சென்ற சிறுத்தை அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகியுள்ளது.

தனியார் விடுதியில் வாத்தை கவ்வி சென்ற சிறுத்தை கேமராவில் சிசிடிவி காட்சி

தற்போது இந்த சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வைரலாகி வரும் நிலையில், வனத்துறை அதிகாரிகள் இதுபோன்ற காட்டு விலங்குகள் நகர் மற்றும் கிராம பகுதிகளில் உலா வருவதை தடுக்க வேண்டுமென்று, தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ரோந்து பணியில் மேற்கொண்டு வருகின்றனர். என வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை வலுத்து வருகிறது. அங்கு வசித்து வரும் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review