கொரோனா தாக்கம், காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் கடந்த வருடம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் உடுமலை,பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரண்டு ஆண்டுகள் கடந்து நடைபெறும் தேரோட்டம் என்பதால் உடுமலை நகரமே விழாக்கோலம் பூண்டது. மக்கள் வெள்ளத்தில் அம்பிகை மாரியம்மன் ராணி போல் உலாவினாள் அந்த பகுதிகளில்.

அது போல இந்த வருடம், உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கான புதிய தேர் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் கோலாகலமாக நடக்கும்.
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கோயிலில் தேரோட்டம் நடைபெறவில்லை. கடந்த வருடம் நடந்தது. அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட தேர் திருவிழா, விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த ஆண்டு தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் படி கடந்த 28- ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கின.தொடர்ந்து 4 ஆம் தேதி கம்பம் நடுதலும் நடைபெற்றது. தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கனக்காண பக்தர்கள் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.
இந்த அருள்மிகு மாரியம்மன் தேரோட்டம் நிகழ்ச்சி வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர் முக்கிய வீதிகள் வழியாக ஓடி நிலையை அடையும். சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுப்பர். முழுவதும் மரத்தினால் செய்யப்பட்ட இந்த தேர், நுாற்றாண்டு பழமையானது. பல்வேறு சுவாமிகளின் உருவங்கள், புராண, இதிகாச கதைகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்து இருக்கும்.

இந்நிலையில் தற்போது இருக்கும் தேருக்கு பதிலாக, புதிய தேரினை உருவாக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. புதிய தேரினை 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேக்கு மரம் மற்றும் இலுப்பை மரம் போன்ற மர வகைகளை பயன்படுத்தி 220 சிற்ப அலங்காரங்களுடன் வேலைப்பாடுகள் நடைபெற்றது.
ஏப்ரல் 13 அன்று நடக்கவிருக்கும் தேரோட்டத்துக்காக தேரை தயார் படுத்தும் வேலைகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தேரோட்டத்திற்கு முன்பு திருக்கல்யாணம், பூவோடு எடுத்தல் மற்றும் கலை நிகழ்சிகள் போன்றவை கோலாகலமாக பின்வரும்.
மாரியம்மன் திருவிழாவின் போது, மழை வரும் என்பது ஐதீகம் என்பதால், அந்த பகுதி மக்கள் மட்டும் அல்லது சுற்று வட்டார விவசாயிகளும் ஆர்வமாக காத்திருப்பர்.
திருப்பூர்,உடுமலை,பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உடுமலை நகரில் குவிவது வழக்கம். அந்தப் பகுதியில் நடைபெறும் பெரிய திருவிழா என்பதால், மாவட்ட காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.