சேர் காலியா இருக்குது உங்க கால்ல விழுந்து கும்பிடறேன் வாங்க வந்து உட்காருங்க. விழுப்புரம் பிஜேபி ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கலியவரதன் பேச்சு.

2 Min Read
நடிகை நமீதா

விழுப்புரத்தில் பிஜேபி சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் திமுக அரசு கொண்டுவந்துள்ள மகளிர் உரிமைத் தொகையை அனைத்து மகளிருக்கும் வழங்க வலியுறுத்தியும், மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் திரைப்பட நடிகையும் பிஜேபி கட்சியை சேர்ந்த நடிகை நமீதா கலந்து கொள்வார் என்று அறிவிப்பு இருந்தது.

- Advertisement -
Ad imageAd image
காலி சேர்

பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட போட்டிருந்த 150 சேர்களில் பாதிக்குமேல் காலியாக இருந்ததை கண்ட பாஜக மாவட்ட தலைவர் கலியவரதன் மைக்கை பிடித்தார். “பாஜக தொண்டர்கள் அனைவரும் காலியாக உள்ள சேரில் வந்து உட்காருங்கள் பத்திரிகைக்காரர்கள் காலியாக உள்ள சேர்களை மட்டுமே படம் எடுக்கிறார்கள். உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். அங்கே நிற்கிற பாஜக நிர்வாகிகள் மற்றவர்கள் அவர்கள் காலில் விழுந்து அவர்களை அழைத்து வந்து உட்கார செய்யுங்கள்” என்று பேசியது பார்வையாளர்கள் மத்தியில் நகைப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் திரைப்பட நடிகை நமீதா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய அவர் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. தகுதி உள்ளவருக்கு என்று குறிப்பிடும்போது கேஸ் இணைப்பு இருந்தால் கூட உரிமைத்தொகை வழங்குவதில்லை. கேஸ் இணைப்பை ஏற்கனவே மோடி வழங்கி விட்டார். ஆயிரம் ரூபாய் குறிப்பிட்டவர்களுக்கு வழங்குவது தமிழக மக்களுக்கு செய்கிற பச்சை துரோகம். பேருந்தில் மகளிருக்கு இலவசம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

காலி சேர்

இந்த அறிவிப்புக்கு முன்னர் பேருந்தில் பயணம் செய்தால் ஆண், பெண் யாராக இருந்தாலும் ரூபாய் பத்து ரூபாய் கட்டணமாக இருந்தது. இப்போது பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்துவிட்டு அதே பேருந்தில் பயணம் செய்கிற பெண்ணின் கணவருக்கு ரூபாய் 20 ரூபாய் டிக்கெட்டாக வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம் இது போன்ற பல்வேறு கட்டண உயர்வுகளை தமிழக அரசு செய்து வருகிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பேசினார்.

கண்டன ஆர்பாட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அறிவிப்புகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.கண்டன ஆர்பாட்டம் உச்சி வெயிலில் நடை பெற்றதால் பங்கேற்றவர்கள் முக்காடு அனிந்து கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a review