மத்திய அரசு பணிகளில் நேரடியாக நியமிக்கும் நடைமுறை ரத்து- மத்திய அரசு

0
44
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம்

மத்திய அரசு பணிகளில் அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் நடைமுறையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன முறைகளுக்கான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் யுபிஎஸ்சிக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது ..

மத்திய அரசு துறைகளில் உள்ள இணை செயலாளர்கள், இயக்குநர்கள் போன்ற பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அரசுத்துறை உயர் பொறுப்புகளில் பெரும்பாலும் பணி அனுபவம் சார்ந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்து ஏற்கனவே அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவது வழக்கம்.

இதனை மாற்றி மத்திய அரசு “லேட்டரல் என்ட்ரி” மூலம் தனியார் நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் நிபுணர்களை நேரடியாக ஒப்பந்த அடிப்படியில் இணை செயலர், துறை இயக்குனர் போன்ற உயர் பொறுப்புகளில் பணி நியமனம் செய்து வருகிறது.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் 1

முதலில் மூன்றாண்டுகள் ஒப்பந்தம் மூலம் பணி வழங்கப்பட்டு, பின்னர் தேவைக் கருதி பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரையில் உயர்த்தப்படலாம் என்றும் யுபிஎஸ்சி தெரிவித்து இருந்தது. 2018 முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நடைமுறையில் இதுவரையில் 63 பேர் பனி அமர்த்தப்பட்டுள்ளனர் . இவ்வாறு பணியார்த்தப்படுவதில் இடஒதுக்கீடு, அரசுப்பணி மூத்த அனுபவம் உள்ளிட்டவை பார்க்கப்படுவதில்லை.

இதே முறையை பின்பற்றி அண்மையில், மத்திய அரசு காலிப்பணியிடங்களான இணை செயலர், துறை இயக்குனர் என மொத்தம் 45 மத்திய அரசுத்துறை உயர்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. யுபிஎஸ்சியின் இந்த நடைமுறை எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியமான பதவிகளில் லேட்டரல் என்ட்ரி (நேரடி நியமனம்) மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் SC, ST மற்றும் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கட்டமாக விமர்சனம் செய்தார். அதேபோல , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் , சமாஜ்வாடி கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிதலைவர்களும் இந்த நேரடி நியமன முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்களை மேற்கோள்காட்டி, மத்திய அரசு பணியிடங்களில் நேரடி பணி நியமன முறையில் ஆட்களை சேர்க்கும் விளம்பரங்களை தற்போது ரத்து செய்யுமாறு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here