2030-31 ஆம் ஆண்டிற்குள் 4,000 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு …

Jothi Narasimman
1 Min Read
பேட்டரி எரிசக்தி சேமிப்பு கிடங்கு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

2030-31 ஆம் ஆண்டிற்குள் 4,000 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவில் 40% வரை வரவுசெலவுத் திட்ட உதவியாக சாத்தியக்கூறு இடைவெளி நிதி வடிவத்தில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை பேட்டரி சேமிப்பு அமைப்புகளின் செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் திறனைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம் குடிமக்களுக்கு சுத்தமான, நம்பகமான மற்றும் மலிவு விலையில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரூ.9,400 கோடி தொடக்க ஒதுக்கீட்டில், ரூ.3,760 கோடி வரவுசெலவுத் திட்ட ஆதரவு உள்பட, பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதித்திட்டம், நிலையான எரிசக்தி தீர்வுகளுக்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. இதன் மூலம்  ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு  ரூ.5.50 – 6.60 வரை சமநிலைப்படுத்தப்பட்ட சேமிப்பு செலவை  அடைவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

Share This Article
Leave a review