மத்திய ஆயுத போலீஸ் படைகளில் (CAPF) கான்ஸ்டபிள் போட்டி தேர்வு அறிவிப்பு!

1 Min Read

மத்திய ஆயுத போலீஸ் படைகளில் (சி.ஏ.பி.எஃப்) கான்ஸ்டபிள் (ஜி.டி), எஸ்.எஸ்.எஃப் மற்றும் ரைபிள்மேன் (ஜி.டி) அசாம் ரைபிள்ஸ் தேர்வு, 2024-க்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்), மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்), இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி), சஷஸ்திர சீமா பால் (எஸ்.எஸ்.பி), தலைமைச் செயலக பாதுகாப்புப் படை (எஸ்.எஸ்.எஃப்) மற்றும் அசாம் ரைபிள்ஸ் (ஏ.ஆர்) ஆகியவற்றில் கான்ஸ்டபிள் (பொது கடமை) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை 24.11.2023 -ம் தேதி வெளியிட்டுள்ளது.

பணி விவரம், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

CAPF Exam

விண்ணப்பங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.12.2023 ஆகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 01.01.2024 ஆகும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், தேர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும், இது தேர்வு தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு மிகாமல் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். புகைப்படம் தொப்பி இல்லாமல் இருக்க வேண்டும், கண்ணாடி மற்றும் முகத்தின் முன் பார்வை தெரியும் வகையில் இருக்க வேண்டும்.

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு 2024 –ம் ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் 21 தேர்வு மையங்கள், நகரங்களில் நடைபெறும். ஆந்திராவில் 10 மையங்கள்; தமிழகத்தில் 7 மையங்களும், புதுச்சேரியில் 1 மையமும், தெலங்கானாவில் 3 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a review