- தஞ்சாவூர் மேற்கு நிலையத்திற்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட மற்றும் பேருந்துகளில் செல்போன்களை தவறவிட்டதாக பல்வேறு புகார்கள் வந்தன.
இதனை அடுத்து தஞ்சை மாவட்ட எஸ்.பி ஆசிஸ் ராவத் அறிவுரைப்படி டவுன் டி.எஸ்.பி சோமசுந்தரம் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி சப் இன்ஸ்பெக்டர் தேசிய மற்றும் சிறப்பு சபையில் சம்பந்தம் முதல்நிலை காவலர்கள் தேன்மொழி அகிலா ஆகியோர் குழுவாக செயல்பட்டு பல்வேறு நாட்களில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் 7 லட்சம் மதிப்பிலான 100 களை மீட்டனர் தொடர்ந்து இந்த செல்போன்களை டவுன் டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைவாணி முன்னிலையில் உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் மேலும் விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தும் போது அவற்றை கவன குறைவாக தவறவிடுவது போன்ற சம்பவங்கள் நடக்கிறது இவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/harsh-condemnation-for-dharmakartha-and-others-who-took-video-reels-in-tiruvekadu-temple/
பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை சி இ ஆர் ஆஃப் வாயிலாக கண்டறிந்து தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் பொதுமக்கள் தங்களின் செல்போன்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்.