அன்னூர் அருகே நள்ளிரவில் செல்போன் கடையில் புகுந்து சாவகாசமாக விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிந்தும் எந்த அச்சமும் இல்லாமல் திடிச்செல்லும் இளைஞர்கள்.இளைஞர்களின் அடையாளம் மிக தெள்ளத்தெளிவாக பதிவாகி உள்ளது அந்த சிசிடிவி கேமராவில்.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால்(44). இவர் கடந்த 15 ஆண்டுகளாக அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் காரமடையில் இருந்து கடைக்கு சென்று பணிகளை முடித்து விட்டு இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கடையின் உள்ளே சென்று பார்த்த போது,பெரும் அதிர்ச்சி அங்கு வைக்கப்பட்டிருந்த 5 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து வேணுகோபால் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது, நள்ளிரவு நேரத்தில் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே வரும் மர்ம நபர்கள் இருவர், கடையில் இருந்த பொருட்களை சாவகாசமாக நோட்டமிட்டதுடன், 5க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றது சென்றது தெரிய வந்தது.

இச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அன்னூர் போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும் மேட்டுப்பாளையம் சாலையில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குற்றவாளிகள் மிக விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் உறுதியாக தெரிவித்தனர்.அந்த சிசிடிவி காட்சிகள் அவ்வளவு தெளிவாக பதிவாகி உள்ளது.வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை நிறுவனர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் போலீசார்.