பெரம்பலூரில் நகை வாங்குவது போல் நகை கடையின் உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி நகையை இரு மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது*
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் வசித்து வருபவர் சின்னசாமி வயது 63 உடைய இவர் பெரம்பலூர் துறையூர் சாலை கடைவீதி பகுதியில் செல்லியம்மன் ஜுவல்லரி எனும் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த நகைக்கடையில் இன்று நகை வாங்குவதற்காக இரு மர்ம நபர்கள் சென்றுள்ளனர். கடையின் உரிமையாளர் சின்னசாமி வயதானவராக இருந்தமையால் அவரிடம் சகஜமாக பேசிக் கொண்டே நகையை எடுத்து காண்பிக்க சொல்லி பேச்சு கொடுத்துள்ளன.

அந்த மர்ம நபர்கள், சுமார் 10 நிமிடங்கள் வரை பேசி கொண்டே இருந்த இருவரும் திடீரென கல்லாவிலிருக்கும் பொருளை பார்த்து கொண்டிருந்தனர் அதில் முக கவசம் அணிந்த மர்ம நபர் கல்லாவில் இருந்த சுமார் 3.75 சவரன் மதிப்புள்ள தங்க கட்டி ஒன்றை எடுத்து தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு பின்னர் எதுவும் வாங்காமல் திரும்பி சென்று விட்டனர். அதுவரை என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்த சின்னசாமி சிறிது நேரம் கழித்து கல்லாவை பார்த்த போது கல்லாவில் இருந்த தங்க கட்டி காணமல் போனது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் சின்னசாமி பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அங்கு வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தங்க கட்டியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது