வழிவிட மறுத்த ஓட்டுநர் நடத்துனரை கொலை வெறி தாக்குதலோடு தாக்கிய கும்பல் கைது

1 Min Read

வழி விடாத பேருந்து ஓட்டுநர் நடத்துனரை தாக்கிய கும்பல் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர்

- Advertisement -
Ad imageAd image

கும்பகோணத்தில் இருந்து திருவிடைச்சேரி வரை சென்று வரும் தியாகராஜன் என்ற தனியார் பேருந்து திருவிடைக்கசேரியில் இருந்து கும்பகோணம் நோக்கி  கூகூர் ஆலத்தூர் ரோடு  அருகே வரும்போது துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில்  வந்த நபர்கள் தங்களுக்கு வழி விடும்படி ஆரம்பித்துக் கொண்டு வந்தார்கள் ஆனால் நேரத்தை கணக்கில் கொண்டு ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கினார். தங்களுக்கு சாலையில் பேருந்து வழி விடாத ஆத்திரத்தில் நடு ரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு ஒரு கும்பல் பேருந்துக்குள் வந்து யாரிடமும் அதிகம் பேசவில்லை ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அந்த கும்பல் தாக்கிது பயணிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

தங்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் நடத்துனர் அருண்குமார் புகார் அளித்ததை அடுத்து பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்த நாச்சியார்கோவில்  போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட தாகூர் பகுதியை சேர்ந்த தமிழழகன், ரவிச்சந்திரன், பாண்டியன், மகேஷ் பாபு, பவித்ரன் என்ற ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Share This Article
Leave a review