நீலகிரி மாவட்டம் பந்தலூர் தொண்டியாலம் பகுதியில் வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானை வனத்துறையினரையும் குடியிருப்புவாசிகளையும் துரத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இந்த பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி அட்டகாசம் செய்து வருவது வழக்கம்.வனத்துறையினரும் பலமுறை போராடி யானைகளை விரட்டி வருகின்றனர்.இருந்தாலும் சில நேரங்களில் அதையும் மீறி இப்படி யானைகள் வருவது வழக்கமான ஒன்றாகி போய்விட்டது.
பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகள் அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருகிறது. இதனால் மனித உயிர் பலிகளும் ஏற்பட்டு வரும் இந் நிலையில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் இரவு மற்றும் பகல் நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பந்தலூர் தொண்டியாலம் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானை திடீரென வனத்துறையினரையும் குடியிருப்பு வாசிகளையும் ஆக்ரோசமாக தாக்க துரத்தியது.

உடனே அவர்கள் வீட்டிற்குள் ஓடிச் சென்று தப்பித்தனர். பின்பு டார்ச் லைட்டுகள் அடித்தும் சத்தமிட்டும் யானையை விரட்ட முயற்சித்தனர்.ஆனாலும் யானை அங்கிருந்து செல்வதாய் இல்லை. நீண்ட நேரம் போராடி காட்டு யானையை கூச்சலிட்டு வனத்துறையினர் துரத்தினர் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரம் இந்த பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இப்படி குடியிருப்பு பகுதியில் யானை நடமாட்டம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இதற்கு காரணம் யானைகளின் உணவுத்தேவை தான்.என்கிறார்கள் வன ஆர்வலர்கள்.வனப்பகுதிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டதன் எதிரொளி தான் இது போன்ர சம்பவங்கல் நிகழ காரணமாகி வருகின்றன.

வனங்களில் வன விலங்குகள் உணவு தேவை முற்றிலுமாக அழிக்கப்பட்டது.இதனால் யானை போன்ற வன விலங்குகள் உனவு தேவைக்காக இப்படி மக்கள் குடியிருக்கும் பகுதி விளை நிலங்கள் என நாடி வருகின்றன.வனப்பகுதிகளுக்குள் விலங்குகளுக்கு தேவையான உனவு கிடைக்கும் நிலையில் அவைகள் இப்படி ஊருக்குள் வர வாய்ப்பில்லை என்கிறார்கள் வன ஆர்வலர்கள்.அரசு இதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.இல்லை என்றால் வன விலங்குகள் அழியத் தொடங்கி விடும்.அவற்றை காப்பாற்ர வேண்டிய பொருப்பு அரசிடம் உள்ளது.அரசு கவனம் செலுத்த வேண்டும்.