பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி இதுவரை 120 பெண்களை ஏமாற்றியதாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு: நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை சிறை

2 Min Read
காசி

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி (26). பெண் டாக்டர் உள்பட பல பெண்களுடன் பேஸ்புக் மூலம் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் அந்த பெண்களிடம் காதல் அம்பை எய்துள்ளார்.இதில் சிக்கும் பெண்களை தனியாக வரசொல்லி அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்திருந்தார். இதையடுத்து அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பிவிடுவதாக காசி மிரட்டியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

மேலும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண், பள்ளி மாணவி என அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்தனர். அந்த புகாரில், காசி தங்களுடன் நெருங்கி பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கூறியிருந்தனர். மேலும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி புகாரும் அளிக்கப்பட்டது.

இவ்வாறு மிரட்டி மிரட்டியே அந்த பெண்களை மீண்டும் மீண்டும் தன்னுடைய பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார். ஒரு வேளை மீண்டும் பாலியல் இச்சைக்குள்ளாகாத பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலையும் காசி செய்ததாக பெண் ஒருவர் புகார் செய்திருந்தார்.அந்த புகாரின் பேரில் காசி குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக காசி மீது புகார்கள் குவிந்த வண்ணம் இருந்ததால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் காசிக்கு உதவியதாக அவருடைய நண்பர் ஒருவரையும் கைது செய்தனர். மேலும் காசிக்கு உதவும் வகையில் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக அவருடைய தந்தை தங்க பாண்டியனும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 முறை ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.மூன்றாவது முறையும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் காசியின் தந்தை என்பதை தவிர அந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் 395 நாட்களாக சிறையிலிருந்ததால் என் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதில் 22 வயது இளம்பெண் பலாத்காரம் தொடர்பாக மகிளா கோர்ட்டில் நடந்து வந்த வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக பாளையங்கோட்டை சிறையில் இருந்து நாகர்கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காசியை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் காசியை குற்றவாளி என்று நீதிபதி ஜோசப் ஜாய் அறிவித்தார். இளம்பெண்ணை கற்பழித்த குற்றத்துக்காக சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.

Share This Article
Leave a review