மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட …

KARAL MARX
1 Min Read
மாஞ்சோலை தேயிலை தோட்டம்

மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு, வல்லுனர் குழு அமைத்து அதன் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு .

- Advertisement -
Ad imageAd image

மாஞ்சோலை தொடர்பான பிற வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து ஆகஸ்ட் 14 ம் தேதி அன்று பட்டியலிட உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு.

மதுரையைச் சேர்ந்த சுந்தரராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

மதுரை உயர் நீதிமன்றம்

அதில், “மாஞ்சோலை தேயிலை தோட்டம் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனிக்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கப்பட்டது. தற்போது பிபிடிசி நிறுவனம் அங்கிருந்து வெளியேறும் சூழலில், வனத்தை குத்தகை காலத்திற்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன உயிரினங்கள் , காடுகளில் உணவு தேட செல்வதற்கு இந்த தேயிலைத் தோட்ட பகுதியை கடந்து செல்லும் நிலை உள்ளது. ஆகவே தேயிலை தோட்டத்தை வனமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு, வல்லுனர் குழு அமைத்து அதன் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, ” மாஞ்சோலை தொடர்பான பிற வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து ஆகஸ்ட் 14 ம் தேதி அன்று பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Share This Article
Leave a review