திருச்சி மாநகராட்சியில் ஜவுளி கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களில் பாதுகாப்பு வசதி செய்யக்கோரி வழக்கு.

1 Min Read
ஜாமின் நீட்டிப்பு மனுவை மறுத்த உச்சநீதிமன்றம்
  • திருச்சி மாநகராட்சியில் ஜவுளி கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களில் பாதுகாப்பு வசதி செய்யக்கோரி வழக்கு.

விதிமீறல் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

- Advertisement -
Ad imageAd image

திருச்சியை சேர்ந்த அல்லூர் சீனிவாசன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி நகரில் ஜவுளி கடைகள், நட்சத்திர ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள் என பொதுமக்கள் அதிக அளவில் கூடும் வணிக நிறுவனங்கள் ஏராளமானவை உள்ளன. இந்த இடங்களில் கட்டட விதி மீறல்கள் உள்ளன. மேலும் இங்கெல்லாம் அவசர கால மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்படவில்லை.

இந்த நிறுவனங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தனியார் ஓட்டல்கள், ஜவுளிகடைகள், ஷாப்பிங் மால்களில் ஆய்வு நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டட விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த மனுக்களை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

கட்டட பாதுகாப்பு விதிகளின்படி அனுமதி பெற ஏற்கனவே விண்ணப்பித்த தனியார் நிறுவனங்கள், அதுதொடர்பான விவரங்களை திருச்சி மாநகராட்சியிடம் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல முறையான வசதிகள் இல்லாத, அனுமதி பெற விண்ணப்பிக்காத மற்ற கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும். அங்கு விதிமீறல்கள் இருந்தால் 12 வாரத்தில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a review