ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நிறுத்த கோரி அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு – அவசர வழக்காக விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்றம் .!

2 Min Read

சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நிறுத்த கோரி அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு . இந்த விவகாரத்தை எல்லாம் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மறுப்பு.

- Advertisement -
Ad imageAd image

சென்னையில் ஆகஸ்ட் 31, மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த விவகாரத்தை எல்லாம் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என்று மனுவின் விசாரணையை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் .

உச்சநீதிமன்றம்

இதேபோல் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நிறுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை உயர் நீதிமன்றம்

மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கார் பந்தயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட உள்ள வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.

கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/abandon-the-adani-port-expansion-plan-which-is-threatening-the-livelihood-of-the-fishermen/

இதைக் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இந்த மனுவை நாளை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தது.

Share This Article
Leave a review