ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றுவதில் , உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு .

2 Min Read
மக்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையயின் கழிவுகளை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு அனுமதிக்காத எந்த பணிககளையும் மேற்கொள்ள உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்தியதையடுத்து. ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

மக்கள் போராட்டம் 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்கவும்,கழிவுகளை நீக்க அனுமதிக்கோரியும் வேதாந்த தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கழிவுகளை நீக்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை என ஆலை தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது.

ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான ஜோசப் அரிஸ்டாட்டில்;,‘‘ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அவர்கள் தான் அகற்றவில்லை. மேலும் ஜிப்சம் கழிவுகளை அகற்ற தமிழ்நாடு அரசு தடையாக இல்லை. மேலும் நாங்கள் கொடுத்த கால அவகாசத்தையும் ஆலை தரப்பில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

பூவுலகின் நண்பர்கள

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், “ஸ்டெர்லைட் விவகாரத்தை பொருத்தமட்டில் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் உயர்மட்ட குழு அனுமதி வழங்கியுள்ளபடி மட்டுமே கழிவுகளை நீக்க வேண்டும். அது ஆலையின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழக அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது. அதுசார்ந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என திட்டவட்டமாக நீதிபதிகள் அறிவிப்பு .பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை :

ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றும் பணியை தமிழ்நாடு அரசே மேற்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர். கழிவுகளை அகற்றும் பணிக்கான செலவு தொகையை ஸ்டெர்லைட்டிடம் இருந்து அரசு பெற்றுக்கொள்ள வேண்டும். கழிவு அகற்றும் பணியை வேதாந்தாவிடம் தந்தால் அதை பயன்படுத்தி ஸ்டெர்லைட்டை மீண்டும் திறந்து விடும். கழிவு அகற்றம், பராமரிப்பு பணிக்கு ஸ்டெர்லைட்டுக்கு தந்த அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்ப பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review