சிவகங்கை மக்களவைத் தொகுதி என்பது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும் . அதன் தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதி எண் 31 ஆகும்.
1967 முதல், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியை 1980,1984, 1989, 1991, 1999 , 2004, 2009 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் ஒன்பது முறை இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது . 2019 தேர்தல்கள், 1977 மற்றும் 2014 தேர்தல்களில் இரண்டு முறை அ.தி.மு.க. தமிழ் மாநில காங்கிரஸ் 1996 மற்றும் 1998 தேர்தல்களில் இரண்டு முறை, மற்றும் 1967 மற்றும் 1971 தேர்தல்களின் போது திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு முறை வெற்றி பெற்றது.இத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.
தொகுதி மறுசீரமைப்பின் கீழ் சிவகங்கை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு இத்தொகுதியில், திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.
திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவை. மற்ற தொகுதிகள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவை.இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
திருமயம்
ஆலங்குடி
காரைக்குடி
திருப்பத்தூர்
சிவகங்கை
மானாமதுரை (தனி) ஆகும்.
பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிதான் அதிக அளவில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.ஆனால் இந்த முறை திமுக போட்டியிட தலைமைக்கு நெருக்கடி கொடுக்கிறது.
திமுகவில் பேசப்படும் வேட்பாளர்கள்,ஆர்.ஜோன்ஸ் ரூஸோ.தேவகோட்டையில் பிறந்த இவர்.BA, வரலாறு படித்துள்ளார்.இவர் கட்சியில் வகித்த பதவிகள்.தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவர்.மாவட்ட துணைச் செயலாளர் சிறுபான்மை நலப்பிரிவு வாரிய உறுப்பினர் பதவிகள் இவருக்கு சீட் கிடைக்கும் என பேசப்படுகிறது.
அதே போன்று திமுகவில்
பேசப்படும் இரண்டாம் வேட்பாளர்.த.வேங்கை மாறன்,திருப்புவனத்தில் பிறந்தவர் இவர்.பி.ஏ. பொருளாதாரம் படித்தவர்.கட்சியில் இவர் வகித்த பதவிகள்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்.ஒன்றிய செயலாளர்,மாவட்ட கழக செயலாளர்.மேலும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சிவகங்கை,தற்போது வகித்து வரும் பதவி:
திருப்புவனம் பேரூராட்சி தலைவர்.இவருக்கும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.திமுகவில்
பேசப்படும் மூன்றாவது வேட்பாளர்:C.ருக்மா சரவணன்.தற்போது இவர்
மாவட்ட தலைவர் வர்த்தக அணி பொருப்பாளராக உள்ளார்.
அதே போன்று காங்கிரஸ் கட்சியில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பனின் மகன் ஜெயசிம்மனும் பேசப்பட்டு வருகின்றனர்.அதே போன்று அதிமுகவில் பொன்.மணி பாஸ்கரன்,சேவியர் தாஸ்.முன்னாள் அமைச்சரின் மகன் B.கருணாகரனும், பாரதிய ஜனதா கட்சியில்
நாகராஜன் ராமேஸ்வரனும்,னீர்மூழ்கி கப்பல் பொறியாளர் NK.லெப்டினன்ட் ராமன் ஆகியோரும் போசப்பட்டு வருகின்றனர்.யாருக்கு வாய்ப்பு பொருத்திருந்து பார்ப்போம்.
.