கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 39வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
கன்னியாகுமரி
நாகர்கோவில்
குளச்சல்
பத்மநாபபுரம்
விளவங்கோடு
கிள்ளியூர்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து போட்டியிட்ட ஹெச். வசந்த குமார் 6 லட்சத்து 20 ஆயிரத்து 594 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.கடந்த முறை வென்ற பாரதிய ஜனதா கட்சியின் பொன். ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 62 ஆயிரத்து 976 வாக்குகளே பெற்றார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியும், இந்திய தேசிய காங்கிரஸூக்கும் இடையே மிக பெரும் போட்டி நிலவியது.

2019-ல் நடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கும் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வசந்தகுமார் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் இரண்டே ஆண்டுகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதை எடுத்து 2021 இல் நடந்த இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மகனான விஜய் வசந்த் அதே கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மீண்டும் தற்போது காங்கிரஸ் கட்சி விஜய் வசந்தத்திற்கு சீட்டு வாங்க வேண்டும் என்பதில் மும்பரமாக இருந்து வருகிறது.

ஆனாலும் திமுக கூட்டணியில் இந்த தொகுதியில் மீண்டும் திமுக போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் திமுக மாநில மகளிர் அணி செயலாளரான ஹெலன் டேவிட்சன் எப்படியாவது சீட்டு வாங்கிவிட வேண்டும் என்று இருக்கிறார் என்று பேசப்படுகிறது. அதேபோல கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆன கேட்ஸன் திமுகவில் உள்ள எல்லா தலைவர்களையும் சந்தித்து தனக்கு சீட்டு வேண்டும் என்று கேட்டு வருகிறார். பெரும் செல்வந்தரான இவர் பக்கத்து தொகுதியை கூட தான் வெற்றி பெற செய்வேன் என்று கூறுவதாக பேசப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை விஜய் வசந்துக்கு தான் சீட்டு என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மக்கள் எந்த நேரத்திலும் எளிமையாக இவரை சென்று சந்திக்க முடியும் இதுவே அவருக்கு கூடுதல் பலமாக இருந்து வருகிறது அவர் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தில் ஒரு பைசா கூட எடுத்துக் கொள்ளாமல் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கும் கல்விக்கும் செலவு செய்திருக்கிறார்.

ஆனாலும் தொடர்ந்து அகில இந்திய அளவில் இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும் சீட்டில் கன்னியாகுமரியை தனக்கு தாருங்கள் என டெல்லி தலைமையை வலியுறுத்தி வருகிறார் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ். பாஜக சார்பில் மீண்டும் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியை தற்போது மீண்டும் கேட்டு கம்யூனிஸ்ட் நெருக்கடி கொடுத்து வருகிறது. அதிமுக அணி சார்பில் 2014இல் ஜெயலலிதாவால் நிறுத்தி தோல்வி அடைந்த ஜான் தங்கம் மாவட்ட செயலாளரான சிவ செல்வராஜ் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக பேசாப்படுகிறது.