பேசப்படும் வேட்பாளர்கள் – ஆரணி

3 Min Read

2009 தேர்தலுக்கு முன்பு வரை ஆரணி பாராளுமன்ற தொகுதி வந்தவாசி தொகுதியாக இருந்தது. பின்னர் இதில் சில தொகுதிகள் நீக்கப்பட்டு சில தொகுதிகள் புதியதாக சேர்க்கப்பட்டு ஆரணி நாடாளுமன்ற தொகுதியாக உருவாக்கப்பட்டது. தற்போது இந்த தொகுதிக்குள் ஆரணி, போளூர், செய்யார், வந்தவாசி, செஞ்சி, மயிலம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

- Advertisement -
Ad imageAd image
செஞ்சி ராமச்சந்திரன்

வந்தவாசி தொகுதியாக இருந்தபோது, காஙகிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. 1962ல் காங்கிரஸ் ஜெயராமன், 1967, 1971ல் திமுக சார்பில் விஐடி விஸ்வநாதன், 1977ல் அதிமுக சார்பில் வேணுகோபால், 1980ல் காங்கிரஸ் பட்டுசாமி, 1984, 1989ல் காங்கிரஸ் பலராமன், 1991ல் காங்கிரஸ் கிருஷ்ணசாமி, 1996ல் தமாகா பலராமன், 1998, 1999ல் பாமக துரை, 2004ல் மதிமுக செஞ்சி.ராமச்சந்திரன் வெற்றி பெற்று எம்.பியாக இருந்தனர்.

செஞ்சி சிவா

தொகுதி பெயர் மாற்றம் ஏற்பட்ட பின் நடைபெற்ற தேர்தலில் 2009ல் காங்கிரஸ் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். 2014ல் அதிமுகவை சேர்ந்த செஞ்சி.ஏழுமலை என்பவர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிவானந்தம் தோல்வியை சந்தித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நின்ற விஷ்ணுபிரசாத் கனிசமான வாக்குகளை பெற்றுயிருந்தார்.

ஏகே.மூர்த்தி

இந்த தொகுதியில் 7 முறை காங்கிரஸ் தனித்து நின்றும், கூட்டணி வைத்தும் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறையும், அதிமுக இரண்டு முறையும், பாமக இரண்டு முறையும், தமாக, மதிமுக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.

தரணி வேந்தன்

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் தற்போது அதிமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன் போட்டியிடப் போவதாக தெரிகிறது. சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர் செஞ்சி ராமச்சந்திரன் திமுக, மதிமுக என தற்போது அதிமுகவில் அங்கம் வைக்கும் அவர் இந்த தொகுதியில் போட்டியிட பேசப்பட்டு வரும் வேட்பாளராக இருந்து வருகிறார். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்தவர் செஞ்சி ராமச்சந்திரன் மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக பணியாற்றியவர் மக்கள் செல்வாக்கு மிகுந்தவர் என்று பேசப்படுகிறது. எனவே அதிமுக சார்பில் அவர் போட்டியிடலாம் என்று தெரிகிறது.

விஷ்ணு

மேலும் ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட்ட செஞ்சி ஏழுமலை தற்போது ஓபிஎஸ் அணியில் இருப்பதால் அதிமுகவிற்கான இடம் காலியாகவே உள்ளது செஞ்சி ஏழுமலையும் அல்லது அவரது மகனும் இதே தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

மேலும் திமுக சார்பில் இந்த முறை இந்த தொகுதியை காங்கிரசுக்கு விட்டு தரக் கூடாது என்கிற முடிவில் தீவிரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் திமுக தீர்மான குழு உறுப்பினரான செஞ்சி சிவா போட்டியிட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. அதேபோன்று விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி வேட்பாளர் ஆனந்த் போட்டியிட உள்ளதாகவும் ஆரணி மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் ஒரு பக்கம் போட்டியிட உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.

பிரகலதா

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இணையும் நேரத்தில் பாமகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏகே.மூர்த்தியும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கணேஷ் குமாரும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவே பேசப்படுகிறது. ஏகே. மூர்த்தி ஏற்கனவே அமைச்சரவையில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்னு மீண்டும் காங்கிராசுக்கு கொடுத்தாலும் போட்டியிடுவார் ஆச்சரியப்பட தேவையில்லை.அதே போன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பிரகலதா போட்டியிடவும் வாய்ப்புள்ளது.

Share This Article
1 Review