தமிழகத்தில் புதிதாக 2000 பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பில் இயக்கவும், நீதிமன்ற அறிவுரையின்படி
மாற்றுத்திறனாளி களுக்கான தாழ்தள பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தஞ்சையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி:
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முதற்கட்டமாக புவிசார் “நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு” திட்டத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முதற்கட்டமாக 100 பேருந்துகளில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் பின்னர் அனைத்து அரசு பேருந்துகளிலும் இக்கருவி பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் தமிழகத்தில் புதிதாக 2000 பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பில் இயக்கவும், நீதிமன்ற அறிவுரையின்படி
மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளைகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வெடுக்கும் அறையில் குளிர்சாதன வசதி செய்து தரப்படும் என்றார்.