நாட்டு வெடிகுண்டு வெடித்து பந்தய காளை முகம் சிதைப்பு .

2 Min Read
முகம் சிதைந்த காளை

காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைத்த வெடிகுண்டு புல் மேய்ந்து கொண்டிருந்த காளை மாட்டின் வாயில் சிக்கி வெடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள நம்பி நகரை சேர்ந்தவர் கண்ணன் (35).  இவர்  மாட்டுவண்டிபந்தய காளை பிரியர் . இதனால் தனது வீட்டில் பந்தய காளைகளை வளர்த்து வருகிறார் . மேலும் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று அங்குள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற பந்தயக் காளைகளில்  ஒரு காளை மட்டும் வீடு திரும்பவில்லை.  இரவு பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.  அதனால் கண்ணன்  மீண்டும் காட்டு பகுதியில் சென்று  காளையை தேடிய போது அங்கு முகம் சிறந்த நிலையில்  அந்த காளை உயிருக்கு போராடியது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.சேதமடைந்த பந்தயக் காளை ரூ.3 லட்சம் வரை விலைக்கு கேட்டும் கண்ணன் விற்க மறுத்து அதனை வளர்த்து வந்துள்ளார்.  இதனை அடுத்து அதனை மீட்டு நாங்குநேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து புகார் அளித்தார்.அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர் .

காளையுடன் கண்ணன்

நாடு வெடிகுண்டு வெடித்ததில் காயம்:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள்  சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் சமவெளி பகுதி விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து பல ஆயிரம் ஏக்கரில்  பயிரிடப்பட்டுள்ள வாழை , நெல் , காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை அழித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி  பல்வேறு போராட்டங்கள் மற்றும் புகார்கள் அளித்தும் வனத்துறையின் மெத்தன போக்கால் காட்டு பன்றிகள் கட்டுப்படுத்தப்படாத நிலை இருந்து வருகிறது.

இதனை அடுத்து பல்வேறு இடங்களில் பன்றிகளை  கட்டுப்படுத்த நாட்டு வெடிகுண்டுகளை சிலர் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சமூக விரோதிகள் காட்டு பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்துவதாகவும்  அதில் யாரோ காட்டுப்பன்றிகளை  வேட்டையாட வைத்த வெடிகுண்டு புல் மேய்ந்து கொண்டிருந்த காளை மாட்டின்  வாயில் சிக்கி வெடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆகவே நாங்குநேரி தாலுகாவில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a review