பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்). சென்னை தொலைபேசியின் முதன்மை பொது மேலாளராக பாபா சுதாகர ராவ், ஐ.டி.எஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பி.சுதாகர ராவ் 1993 ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி விசாகப்பட்டினத்தின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன்ஸ் படிப்பில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
1994 ஆம் ஆண்டு இந்திய தொலைத்தொடர்பு சேவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொலைத்தொடர்பு துறையில் மாறுதல் மற்றும் பரிமாற்றம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சைராகுஸ் பல்கலைக்கழகம், பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திடமிருந்து 2007-ம் ஆண்டு தொழில்முறை மேம்பாட்டில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றதுடன், தமது துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராவார்.
2ஜி, 3ஜி, 4ஜி சேவைகளைக் கொண்ட கட்டமைப்பில் 6 மில்லியனுக்கு மேற்பட்ட பிஎஸ்என்எல் வட்ட இணைப்புகளில் பல்வேறு இடங்களில் அவர் வெற்றிகரமாக பணியாற்றியுள்ளார்.
அவரது சிறப்பான பணியை பாராட்டி 2001-2002 ஆம் ஆண்டில் சஞ்சார் சேவாபதக் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.