இன்று விண்ணில் பாய தயாராக உள்ள பிஎஸ்எல்வி – சி 55 ராக்கெட்!

1 Min Read
பிஎஸ்எல்வி - சி 55 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனியார் செயற்கைக்கோள்களை ஒப்பந்த அடிப்படையில் விண்ணிற்கு அனுப்பி வருகிறது. இந்த வணிக ரீதியான ஏவுதல் பணிகளை இஸ்ரோவின் வணிகப்பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த அரசு நிறுவனம் தயாரித்துள்ள டெலியோஸ் 2 என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ   இன்று  விண்ணுக்கு அனுப்புகிறது. 741 கிலோ எடை கொண்டுள்ள இந்த செயற்கைகோள் பிஎஸ்எல்வி – சி 55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இத்தோடு சேர்த்து 16 கிலோ எடை கொண்ட லூம்லைட் – 4 என்ற  செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த 2 செயற்கைகோள்களும் கிழக்கு நோக்கி குறைந்த கோணத்தில் அமையும் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

பிஎஸ்எல்வி சி -55 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து 2023 ஏப்ரல் 22  தேதி (இன்று) நண்பகல் 02:19 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுண்ட் டவுன் நேற்று  மதியம் 12:14க்கு தொடங்கியது. இத்தோடு பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 4 வது  தொகுதியில் போயம் – 2 என்ற பெயரிலான சோதனைக்கருவி இணைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய பிறகு 4 வது  தொகுதி சோதனை கருவியாக இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘போயம் – 2’ கருவியை இஸ்ரோ, இந்திய வான் இயற்பியல் நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி உள்ளன. இந்த ஏவுதலை பொதுமக்கள் நேரில் கண்டு களிக்கும் வகையில் இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.

Share This Article
Leave a review