புதுச்சேரியில் கொடூரம் சிறுமி கொலை சாக்கு மூட்டையில் உடல்

2 Min Read
சிறுமியின் உடல்

புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலட வலியுறுத்தியும், புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீட்டிற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கு முன்னர் சிறுமியின் உறவினர்களும் இளைஞர்களும் புதுச்சேரி கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர் போலீசாரின் பேச்சு வார்தைக்கு பின்னர் போராட்டத்தை கைவிட்டனர். புதுச்சேரி அரசு ரூபாய் 20 லட்சம் நிதி உதவி வழங்க அறிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி பாலியல், அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது வாலிபர் மற்றும் விவேகானந்தன் (57) என்ற முதியவரும் கூட்டு சேர்ந்து சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று சிறுமியின் உடல் அப்பகுதியில் உள்ள கால்வாயில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் போலீசார் சடலமாக மீட்டனர். இன்று சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடந்து பின்னர் முத்தியால்பேட்டையில் உள்ள சிறுமி வீட்டிற்க்கு கொண்டு சென்று பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.ஏராளமான பொதுமக்கள் சிறுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

விவேகானந்தன்

குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

சிறுமியின் தாய்

அந்த வகையில்
சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலியுறுத்தியும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும், புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுபடுத்த வேண்டும், முதலமைச்சர், உள்துறை அமைச்சர் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு சிறுமியின் கொலைக்கு நீதி பெற்ற தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவ – மாணவிகள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள் சிறுமி ஆர்த்தி வீட்டு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதுச்சேரி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

தொடந்து இன்று 07 ம் தேதி இறுதி ஊர்வலம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.சிறுமி வீட்டருகே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review