கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கில் அடுத்தடுத்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா மீது ஹாசன் மாவட்ட முன்னாள் பெண் கவுன்சிலர் பரபரப்பான புகாரை அளித்துள்ள நிலையில் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரில் அந்த பெண் கூறியுள்ள தகவல் அனைவரையும் அதிர வைக்கிறது. முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா மற்றும் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் செக்ஸ் புகாரில் சிக்கி உள்ளனர். இதில் ரேவண்ணா ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ஜேடிஎஸ் சார்பில் ஹாசன் எம்பியாக உள்ளார்.

பாஜக வேட்பாளர்;
தற்போதைய மக்களவை தேர்தலிலும் ஹாசனில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளாராக பிரஜ்வல் போட்டியிட்டுள்ளார். கடந்த மாதம் 26ம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் நடந்தபோது பிரஜ்வல்லின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு சென்று தலைமறைவாகிவிட்டார். பிரஜ்வல் 300 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து 2,976 ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. இதையடுத்து கர்நாடகா அரசு எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‛செக்ஸ் டார்ச்சர்’..
பாலியல் புகாரில் தப்ப தேவகவுடா மகன் ரேவண்ணா செய்ததை பாருங்க! மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்கலாம் என எஸ்ஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து பெண் உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மீது பரபரப்பான புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் திடுக்கிட வைக்கும் விபரங்கள் உள்ளது. அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:நான் ஹாசன் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தேன். இந்த சமயத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக எம்பி, எம்எல்ஏக்களை சந்திப்பேன். 2021ம் ஆண்டில் நான் பிரஜ்வல் ரேவண்ணாவை சந்தித்தேன். கல்லூரி ஒன்றில் உள்ள விடுதியில் மாணவிகளுக்கு சீல் வழங்குவது தொடர்பாக அவரை சந்தித்தேன். முதல் நாளில் அவர் பிஸியாக இருப்பதாக கூறி அனுப்பினார். அப்போது மறுநாள் வரும்படி கூறினார்.

பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கில்,
இதையடுத்து நான் மறுநாள் பிரஜ்வல்லின் எம்பி அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது உதவியாளர் என்னை முதல் தளத்தில் காத்திருக்கும்படி கூறினார். அதன்பிறகு பிரஜ்வல் சில பெண்களுடன் பேசியபடி வந்தார். அவர்களை அங்கிருந்து அனுப்பினார். இதனால் நான் மட்டும் அங்கு இருந்தேன். பிரஜ்வல் என்னை இன்னொரு அறைக்கு அழைத்தார். நான் மறுத்தேன். அவர் எனது கையை பிடித்து உள்ளே இழுத்து கதவை மூடினார். கதவை ஏன் முடுகிறீர்கள்? என நான் கேட்டேன். அதற்கு அவர், ஒன்றும் இல்லை எனக்கூறினார். மேலும் எனது கணவரின் பேச்சை குறைத்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார். மேலும் என் கணவர் அரசியலில் வளர வேண்டும் என்றால் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்று கூறினார்.
மெத்தையில் படு;
ஆடைகளை அவிழ்த்துவிட்டு மெத்தையில் படு என்றார். நான் மறுத்தேன். ஆனால் அவர் விடவில்லை. என்னிடம் துப்பாக்கி உள்ளது. நீயும், உனது கணவரையும் தீர்த்து விடுவேன் என்று மிரட்டி என்னை பலாத்காரம் செய்தார்.மேலும் அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்து கொண்டார். அதன்பிறகு வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டினார். அந்த வீடியோவில் அவரது முகம் இல்லை. எனது முகம் மட்டும் தான் பதிவாகி உள்ளது. இதனால் மானம் போய்விடும் என்று கூறினார். அதன்பிறகு தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்தார். இதுதவிர செல்போனில் வீடியோ கால் செய்து நிர்வாணமாக பேசும்படி கூறி தொல்லை தந்தார். இதுபற்றி வெளியே கூற எனக்கு பயமாக இருந்தது. ஆனால் இப்போது எஸ்ஐடி அமைக்கப்பட்டுள்ளதால் புகாரளித்துள்ளேன் என்று கூறினார். பிரஜ்வல் மீதான இந்த புகார் தற்போது அதிர வைத்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் தண்டனை பிரிவு 376 (2) (என்) (ஒரு பெண்ணை மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்தல்) உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது ஏன் தாமதம்;
முன்னதாக முன்னாள் பணிப்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை ரேவண்ணா மற்றும் மகன் பிரஜ்வல் மீது ஹேலோநரசிப்புரா போலீசில் கடந்த மாதம் 28 ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் எஸ்ஐடி சார்பில் ஹாசன் மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் புகாரில் இன்னொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ரேவண்ணா ஏன் இன்னும் கைது செய்யபடவில்லை? என்கிற கேள்வி எல்லோர் முன்னும் எழுகிறது.