கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட அவருடைய முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் மாயமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகா மாநிலத்தில் ஹாசன் தொகுதியில் ஜேடிஎஸ் கட்சியின் எம்பியாக உள்ளவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். அதாவது மூத்த மகன் ரேவண்ணாவின் மகன், மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மூத்த சகோதரர்தான் ரேவண்ணா.
கடந்த முறை நடந்த கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஜேடிஎஸ் கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் ஜேடிஎஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு காரணமே பாஜகதான் என ஜேடிஎஸ் குற்றம்சாட்டி வந்தது. இந்த நிலையில் கர்நாடகா லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் ஜேடிஎஸ் கூட்டணி வைத்துள்ளது. அந்த மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. குறிப்பாக ஹாசன் தொகுதிக்கு வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ் ஆப்களில் பரவியது. ரேவண்ணாவிடம் உதவி கேட்டு வரும் பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக எடுத்து அதை பென் டிரைவில் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த வீடியோதான் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரஜ்வலோ, அவை எல்லாம் மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் என மறுப்பு தெரிவிக்கிறார். இந்த வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடியோ வெளியான நிலையில் பிரஜ்வலை அவருடை சித்தப்பா குமாரசாமி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில்தான் பிரஜ்வலிடம் கார் ஓட்டுநராக இருந்த கார்த்திக் என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் “தேவகவுடா குடும்பத்திற்கு கார் ஓட்டுநராக இருந்தேன். என்னுடைய நிலத்தை அவர்கள் அபகரித்துவிட்டார்கள். எனது மனைவியையும் துன்புறுத்தினார்கள். இதைத் தொடர்ந்துதான் நான் பாஜகவை சேர்ந்த தேவராஜ கவுடாவை சந்தித்தேன். இறுகும் பிடி!300 பெண்களை நாசமாக்கி வெளிநாடு தப்பிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அவர்தான் எனக்கு நியாயம் கிடைக்க ஊடகத்திடம் பேசுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து தேவராஜ கவுடாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரஜ்வலின் பாலியல் சீண்டல்கள் அடங்கிய பென் டிரைவை அவரிடம் கொடுத்தேன். அவர் எவ்வாறு அதை பயன்படுத்தினார் என தெரியவில்லை. அவர் அந்த பென் டிரைவை வேறு யாரிடமாவது கொடுத்தனரா என தெரியவில்லை. ஆனால் காங்கிரஸிடம் நான் பென் டிரைவை கொடுக்கவே இல்லை. பாஜகவும் ஜேடிஎஸ்ஸும் கூட்டணியில் இருக்கும் போது அந்த வீடியோக்களை தேவராஜ கவுடா வெளியிட்டால் அது கூட்டணிக்கு எதிராகத்தான் முடியும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த டிரைவர் கார்த்திக்கை காணவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் சிவக்குமார் மற்றும் அவருடைய சகோதரர் உள்ளிட்டோர் டிரைவர் கார்த்திக்கை மலேசியாவுக்கு அனுப்பிவிட்டதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் பென் டிரைவ் குறித்து டிரைவர் கார்த்திக் வீடியோ வெளியானது. ஆனால் கார்த்திக்கை காணவில்லை. அவர் எங்கே, எங்கிருந்து அந்த வீடியோ வாக்குமூலத்தை அவர் அளித்தார். அவசர அவசரமாக அந்த வீடியோ எடுக்கப்பட்டு செய்தி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது ஏன். கார்த்திக் மலேசியாவில் இருக்கிறார். அவரை அங்கு அனுப்பியது யார். அங்கிருந்து வீடியோ அனுப்ப வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.