தஞ்சை மாவட்டம் திருவையாறு இருசக்கர வாகனம் லாரி நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

1 Min Read
உயிரிழந்த இருவர்

திருவையாறு அடுத்த அந்தணர்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்த அர்ஜுனன் இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அதே தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கதிர் அடிக்கும் இயந்திரத்தின் டிரைவராக வேலை பார்த்துவருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

அர்ஜுனன், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் மாரியம்மன்கோவில் சென்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பி மோட்டார் பைக்கிள் திருவையாறு நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

விபத்து ஏற்படுத்திய லாரி

அப்போது திருவையாறிலிருந்து தஞ்சை நோக்கி மணல் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. கண்டியூர் அடுத்த அரசூர் மெயின்ரோடு புறவழிச்சாலை அருகே வரும்போது தஞ்சையிலிருந்து திருவையாறு நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் மணல் லாரியும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் அர்ஜுனன், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் டிஎஸ்பி ராஜ்மோகன், நடுக்காவேரி சப்இன்ஸ்பெக்டர் சார்லிமேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்துபோன அர்ஜுனன், பாலசுப்பிரமணியன் ஆகிய இரண்டு பேர்கள் உடலையும் கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review