தர்மபுரி மாவட்டம் கோல்டன் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரன் இவர் 8-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவருடைய மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மாத்திரை கம்பெனி ஒன்றில் கடந்த ஆறு மாதங்களாக பணிபுரிந்து வரும் நிலையில் தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
விடுமுறை நாட்களில் ஹர்ஷா சொந்த ஊருக்கு வந்து திரும்பி ஓசூருக்கு செல்லும் பொழுது உறவுக்கார சகோதரருடன் அனுப்பி வைப்பது வீட்டாரின் வழக்கம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் அன்று சொந்த ஊருக்கு வந்து திரும்பி செல்லும் பொழுது எப்பொழுதும் போல அவருடைய சகோதரருடன் பெற்றோர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இறுதியாக வீட்டில் இருந்து சென்றவர் இந்த தகவலும் வீட்டிற்கு தெரிவிக்கவில்லை.இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு பின்பு அதியமான் கோட்டை அடுத்த நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் ஹர்ஷா மர்மமான முறையில் துப்பட்டாவால் கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
தகவல் அறிந்த காவல்துறையினர் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்மமான முறையில் நரசிங்கபுரம் வனப்பகுதியில் துணியால் கழுத்தை இறக்கி கொலை செய்து உடலைவீசி சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.