- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரனோடை அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரனோடை அரிமா சங்கம் மற்றும் காரனோடை வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.இதில் அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ரவிச்சந்திரன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவுநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து மெல்வின் ஜோன்ஸ் ரத்த வங்கியிலிருந்து வந்திருந்த மருத்துவ குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் அளித்த ரத்தவகைகளை சேகரித்து சென்றனர்.முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-issue-of-supply-of-ghee-by-dindigul-ar-company-to-tirupati-devasthanam/
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் ரவீந்திரன், மணிசேகர், நரசிம்மன், ரவிக்குமார், கோபாலன், ராஜு, கருப்பசாமி, சங்கர், ரவிதாஸ், ரெஜிகுமார், விநாயகம், சுரேஷ், மோகன், பாஜக நிர்வாகி புருஷோத்தமன் மற்றும் காரனோடை வட்டார நாடார் ஐக்கிய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.